ECONOMY

தேர்தலை முன்னிட்டு ஜோகூர் எழுச்சிப் பயணத்தைத் தொடங்குகிறது கெஅடிலான் கட்சி

11 பிப்ரவரி 2022, 1:19 PM
தேர்தலை முன்னிட்டு ஜோகூர் எழுச்சிப் பயணத்தைத் தொடங்குகிறது கெஅடிலான் கட்சி

ஷா ஆலம் பிப் 11- ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்திற்கான எழுச்சிப் பயணத்தை கெஅடிலான் கட்சி நாளைத் தொடக்குகிறது. ‘கெலுவோ இங்குன்டி‘ எனும் வட்டார வழக்குச் சொல்லை சுலோகமாக கொண்ட இப்பயணம் இம்மாதம் 26 ஆம் தேதி தொடங்கும் தேர்தல் பிரசாரத்திற்கான முன்னேற்பாடாக அமைகிறது.

இப்பயணம் பெனுட் தொகுதியில் தொடங்கி குக்கூப் வரை மேற்கொள்ளப்பட்டு பின்னர் பக்கத்தான் ஹராப்பான் கட்சிகள் போட்டியிடும் இதர தொகுதிகளுக்கும் விரிவாக்கம் காணும்.

வரும் மார்ச் மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் மாநிலத் தேர்தலில் ஜோகூர் வாக்காளர்களை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களிப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் இப்பயணத் திட்டத்திற்கு கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஸ்ரீ சம்சுல் இஸ்கந்தார் முகமது அகின் மற்றும் கட்சியின் தொடர்பு பிரிவு இயக்குநர் பஹாமி பாட்சில் ஆகியோர் தலைமையேற்பர் என்று கெஅடிலான் கட்சி வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மக்களை வாக்களிக்க கேட்டுக் கொள்வது உள்ளிட்ட நான்கு அம்சங்களை முன்வைத்து வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னதாக இந்த பயணம் மேற்கொள்ளப் படுகிறது.

 

வகைpendidikan

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.