ஷா ஆலம், பிப் 11- வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கோத்தா கெமுனிங் தொகுதி இலவச சந்தையை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த இலவச சந்தை வரும் ஞாயிற்றுக் கிழமை ஷா ஆலம், செக்சன் 25, கமுந்திங் மண்டபத்தில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.
இந்த சந்தையை தாங்கள் மலேசிய லவ்ஜோய் சங்கத்துடன் இணைந்து நடத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சந்தையில் பொது மக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் தேவையான பொருள்கள பெற்றுக் கொள்ளலாம் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.
இந்த சந்தையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்களுக்கான உடைகள், பேக், சிறார்களுக்கான விளையாட்டுப் பொருள்கள், புத்தகங்கள், மின்சார சாதனங்கள் மற்றும் வீட்டுக்குத் தேவையான உபகரணங்களும் கிடைக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.
இந்த சந்தைக்கு வருவோர் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதோடு பொருள்களை கொண்டுச் செல்ல பைகளையும் உடன் கொண்டு வரவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.








