ALAM SEKITAR & CUACA

வெள்ளம் பாதித்த இடங்களில் துப்புரவுப் பணி 70 விழுக்காடு பூர்த்தி

5 பிப்ரவரி 2022, 5:57 AM
வெள்ளம் பாதித்த இடங்களில் துப்புரவுப் பணி 70 விழுக்காடு பூர்த்தி

ஷா ஆலம், பிப், 5-  வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாம் கட்ட துப்புரவுப் பணி 70 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் கால்வாய்களைச் சுத்தம் செய்யும் பணி வரும் மார்ச் மாதத்திற்குள் முற்றுப் பெறும் என்று கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின்  நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது மக்கள் அப்புறப்படுத்திய குப்பைகளை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்திய காரணத்தால் இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணியை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டதாக அவர் சொன்னார். பொது மக்கள் பொறுமை காக்கும் அதே வேளையில் துப்புரவுப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

வகைpbt

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.