ALAM SEKITAR & CUACA

கிள்ளான், கோல லங்காட்டில் இன்று இடியுடன் கூடிய அடைமழை

1 பிப்ரவரி 2022, 2:50 AM
கிள்ளான், கோல லங்காட்டில் இன்று இடியுடன் கூடிய அடைமழை

கோலாலம்பூர், பிப் 1- சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான் மற்றும் கோல லங்காட் ஆகிய மாவட்டங்களில் இன்று நண்பகல் 12.00 மணி வரை இடியுடன் கூடிய அடைமழை பெய்யும் என்பதோடு பலத்த காற்றும் வீசும் என்று வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது. இப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏறக்குறைய மணிக்கு 20 மில்லி மீட்டர் அளவு இடியுடன் கூடிய அடை மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அத்துறை தனது டிவிட்டர் பதிவில் கூறியது. சரவா மாநிலத்தின் சிபு,முக்கா, பிந்துலு, மிரி ஆகிய பகுதிகளில் இதே போன்ற மோசமான வானிலை காணப்படும் என்றும் அத்துறை தெரிவித்தது.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.