ECONOMY

நாட்டில் நேற்று வரை 50.4 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசி பெற்றனர்

30 ஜனவரி 2022, 9:16 AM
நாட்டில் நேற்று வரை 50.4 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசி பெற்றனர்

ஷா ஆலம், ஜன 30- நாட்டில் நேற்று வரை 50.4 விழுக்காட்டு பெரியவர்கள் அல்லது 1 கோடியே 18 லட்சத்து 9 ஆயிரத்து 467  பேர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மேலும், 2 கோடியே 29 லட்சத்து 23 ஆயிரத்து 709 பேர் அல்லது 97.9 விழுக்காட்டினருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட வேளையில் 99.1 விழுக்காட்டினருக்கு குறைந்த து ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 898.6 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 87 ஆயிரத்து 642 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் 91.1 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 67 ஆயிரத்து 448 பேர் குறைந்த து ஒரு டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளதாக அது தெரிவித்தது.

நேற்று நாடு முழுவதும் 97,300 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதில் 732 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 898 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்ற வேளையில் 95,670 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 33 லட்சத்து 84 ஆயிரத்து 672 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 5 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு கிட்ஹாப் அகப்பக்கத்தின் வழி தெரிவித்தது.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.