ECONOMY

சீனப்புத்தாண்டை முன்னிட்டு பத்தாங் காலி தொகுதியில் 400 பேருக்கு  ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகம்

26 ஜனவரி 2022, 9:35 AM
சீனப்புத்தாண்டை முன்னிட்டு பத்தாங் காலி தொகுதியில் 400 பேருக்கு  ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகம்

ஷா ஆலம், ஜன 26- அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் சீனப்புத்தாண்டை முன்னிட்டு பத்தாங் காலி தொகுதியைச் சேர்ந்த 400 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

குடும்பத்தில் அதிக பிள்ளைகளைக் கொண்ட குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுவதாக பத்தாங் காலி தொகுதி ஒருங்கிணைப்பாளர் சைபுடின் ஷாபி முகமது கூறினார்.

தொகுதி சேவை மையத்தில் நடைபெற்ற இந்த பற்றுச்சீட்டுகளை வழங்கும் நிகழ்வின் போது அவர்களுக்கு மாண்டரின் ஆரஞ்சு பழங்களும் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பெருநாளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் ஏற்படும் நிதிச்சுமையைக் குறைப்பதில் இந்த பற்றுச் சீட்டு விநியோகம் அவர்களுக்கு ஓரளவு துணை புரியும் என்றும் குறிப்பிட்டார்.

மாநில அரசின் இதர உதவித் திட்டங்களில் பங்கேற்பதற்கு ஏதுவாக இந்த பற்றுச் சீட்டுகளை பெறுவோரின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.