ECONOMY

நாட்டில் நேற்று வரை ஒரு கோடியே 11 லட்சம் பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

26 ஜனவரி 2022, 6:46 AM
நாட்டில் நேற்று வரை ஒரு கோடியே 11 லட்சம் பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்

கோலாலம்பூர், ஜன 26- நாட்டில் நேற்றிரவு 11.59 மணி நிலவரப்படி 1 கோடியே 11 லட்சத்து 19 ஆயிரத்து 363 பேர் அல்லது 47.5 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மேலும், 2 கோடியே 57 லட்சத்து 2 ஆயிரத்து 311 பேர் அல்லது 97.9 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது. 

அதே சமயம் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சத்து 62 ஆயிரத்து 066 ஆக அதாவது 99.1 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்று அது தெரிவித்தது.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 83 ஆயிரத்து 457 பேர் அல்லது 88.4 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் 28 லட்சத்து 65 ஆயிரத்து 416 பேர் அல்லது 91.0 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

நேற்று நாடு முழுவதும் 213,226 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டதை தரவுகள் காட்டுகின்றன. அதில் 2,169 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 2,680 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 208,226 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 79 ஆயிரத்து 781 ஆக அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.