கோலாலம்பூர், ஜன 25 - மலேசியாவில் கடந்த ஜனவரி 16 முதல் 22 வரையிலான 3வது நோய்த் தொற்று வாரத்தில் புதிய கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.ஜனவரி 9 முதல் 15 ஆம் தேதி வரையிலான இரண்டாவது நோய்த் தொற்று வாரத்தில் 22,006 ஆக இருந்த இருந்த நோய் கண்டவர்களின் எண்ணிக்கை மூன்றாவது வாரத்தில் 7.9 சதவீதம் அதிகரித்து 23,752 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் சொன்னார்.
இருப்பினும், கோவிட்-19 தொடர்புடைய மரண எண்ணிக்கை 19 சதவிகிதம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இரண்டாவது நோய்த் தொற்று வாரத்தில் 126 ஆக இருந்த மரண எண்ணிக்கை மூன்றாவது வாரத்தில் 102 ஆக குறைந்துள்ளது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பியிவில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாவது வாரத்தில் 30.3 விழுக்காடு குறைந்து 129 ஆக ஆனது. இரண்டாவது தொற்று வாரத்தில் இந்த எண்ணிக்கை 182 ஆக பதிவானதாக டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.
சுவாச உதவி தேவைப்படும் நோயாளிகளைப் பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை 68 இல் இருந்து 52 ஆக அதாவது 23.5 சதவீதம் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ECONOMY
நாட்டில் கோவிட்-19 நோய்ப் பரவல் ஏறுமுகமாக உள்ளது
25 ஜனவரி 2022, 5:29 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
மத்திய கிழக்கு பதற்றம்: பொருளாதார ஊக்கத் திட்டம் இல்லை - நிதி அமைச்சு அறிவிப்பு
Shalini Rajamogun
16 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




