கோலாலம்பூர், ஜன 23 - நாட்டில் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 1 கோடியே 5 லட்சத்து 61 ஆயிரத்து 588 பேர் அல்லது 45.1 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுபூசியை பெற்றுள்ளனர்.நேற்று 53,210 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
இதற்கிடையில், மொத்தம் 2 கோடியே 29 லட்சத்து 15 ஆயிரத்து 270 பேர் அல்லது 97.9 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர்.
அதே நேரத்தில் 2 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்து 788 பேர் அல்லது 99.1 விழுக்காட்டினருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இது தவிர, 12 முதல் 17 வயதுடைய இளையோரில் 27 லட்சத்து 79 ஆயிரத்து 919 பேர் அல்லது 88.3 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 28 லடசத்து 63 ஆயிரத்து 961 பேர் அல்லது 91 விழுக்காட்டினருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று மொத்தம் 154,906 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதில் 1,019 பேர் முதல் டோல் தடுப்பூசியையும் 677 பேர் இரண்டாவது டோஸ் டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.
இதன் வழி தேசிய கோவிட்-19 நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 6 கோடியே 21 லட்சத்து 9 ஆயிரத்து 299 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 14 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.
ECONOMY
நாட்டில் 45.1 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசி பெற்றனர்
23 ஜனவரி 2022, 4:59 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
மத்திய கிழக்கு பதற்றம்: பொருளாதார ஊக்கத் திட்டம் இல்லை - நிதி அமைச்சு அறிவிப்பு
Shalini Rajamogun
16 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




