ECONOMY

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவியை அதிகரிப்பீர்- அன்வார் வலியுறுத்து

20 ஜனவரி 2022, 8:27 AM
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவியை அதிகரிப்பீர்- அன்வார் வலியுறுத்து

 ஷா ஆலம், ஜன 20- வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஊழியர் சேமநிதி வாரியத்திலிருந்து (இ.பி.எஃப்) பணத்தை மீட்பதை தவிர்ப்பதற்காக அவரகளுக்கு வழங்கப்படும் உதவியின் மதிப்பை அதிகரிக்குமாறு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெள்ளத்தினால் ஏற்பட்ட பெருத்த இழப்பினால் அவர்கள் கடுமையான நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவருமான அவர் கூறினார். இ.பி.எஃப். சந்தாதாரர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையிலான எந்த திட்டத்தையும் தமது தரப்பு ஆதரிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

இ.பி.எஃப். உறுப்பினர்கள் தங்கள் சொந்த பணத்தை மீட்பதற்கு ஏதுவாக விதிகள் தளர்த்தப்பட வேண்டும் இன்று சில தரப்பினர் கூறுகின்றனர். அவ்வாறு செய்ய முடியாத பட்சத்தில் அத்தரப்பினரின் சுமையைக் குறைக்க கூடுதல் உதவிகளை நாம் செய்ய வேண்டும் என்றார் அவர்.

வெள்ளத்தில் பாதிக்கப்ப ட்டவர்களுக்கு உடனடி உதவியாக 5,000 வெள்ளி முதல் 10,000 வெள்ளி வரை வழங்கப்பட வேண்டும் என்று கெஅடிலான் கட்சித் தலைவருமான அன்வார்  இம்மாதம் 4 ஆம் தேதி கூறியிருந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.