ALAM SEKITAR & CUACA

பேரரசர் தம்பதியரின் தைப்பூச வாழ்த்து

18 ஜனவரி 2022, 11:13 AM
பேரரசர் தம்பதியரின் தைப்பூச வாழ்த்து

கோலாலம்பூர், ஜன 18. இன்று தைப்பூச விழாவைக் கொண்டாடும்நாட்டிலுள்ள இந்துக்களுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா தம்பதியர் தைப்பூச வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

இந்த பக்திமயமான தினத்தை இந்துக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அதே வேளையில் நிர்ணயிக்கப்பட்ட நிலையான நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) பின்பற்றி நடப்பர் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக மாமன்னர் தம்பதியர் அந்த வாழ்த்துச் செய்தியில் கூறினர்.

நாட்டிலுள்ள பல்லின, சமய மக்களிடையே ஒற்றுமை உணர்வை இந்த தைப்பூச விழா ஏற்படுத்தும் என்று தாங்கள் நம்புவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

மாமன்னர் தம்பதியரின் இந்த வாழ்த்துச் செய்தி இஸ்தானா நெகாராவின் போஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.