கோலாலம்பூர், ஜன 17- நாட்டில் நேற்றைய நிலவரப்படி 40 விழுக்காட்டினர் அல்லது 93 லட்சத்து 64 ஆயிரத்து 326 பேர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.நேற்று 145,922 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
இதனிடையே, பெரியவர்களில்2 கோடியே 29 லட்சத்து 3 ஆயிரத்து 466 பேர் அல்லது 97.8 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ள வேளையில் 2 கோடியே 31 லட்சத்து 83 ஆயிரத்து 820 பேர் அல்லது 99 சதவீதம் பேருக்கு குறைந்த பட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.
இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 73 ஆயிரத்து 734 பேர் அல்லது 88.1 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.
மேலும், 28 லட்சத்து 61 ஆயிரத்து 589 பேர் அல்லது 90.9 சதவீதம் பேர் குறைந்த பட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
ECONOMY
நாட்டில் 40 விழுக்காட்டினர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்
17 ஜனவரி 2022, 8:40 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
மத்திய கிழக்கு பதற்றம்: பொருளாதார ஊக்கத் திட்டம் இல்லை - நிதி அமைச்சு அறிவிப்பு
Shalini Rajamogun
16 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




