ECONOMY

2021 நவம்பரில் உயர்ந்த பட்ச ஏற்றுமதியை சிலாங்கூர் பதிவு செய்தது

15 ஜனவரி 2022, 2:36 PM
2021 நவம்பரில் உயர்ந்த பட்ச ஏற்றுமதியை சிலாங்கூர் பதிவு செய்தது

ஷா ஆலம், ஜன 15- சிலாங்கூர் மாநிலம் கடந்த 2021 நவம்பர் மாதம் அதிகப்பட்ச ஏற்றுமதியை பதிவு செய்துள்ளது. இதன் வழி நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சியில் முக்கிய பங்கினை ஆற்றும் மாநிலம் என் பெருமையை இது பெற்றுள்ளது.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இவ்விபரங்களை இன்று தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் சிலாங்கூர் உயர்ந்த பட்ச அதாவது 630 கோடி வெள்ளி மதிப்பிலான ஏற்றுமதியைப் பதிவு செய்துள்ளது. அந்த மாதத்தில் பதிவான 2,750 கோடி வெள்ளி ஏற்றுமதி மதிப்பில்  32.4 விழுக்காட்டை இது பிரதிபலிக்கிறது என்றார் அவர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான ஏற்றுமதி இறக்குமதி தரவு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு சினார் ஹரியான் பத்திரிகை வெளியிட்ட இந்த செய்தியை மந்திரி புசார் தனது டிவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.