ECONOMY

2.29 கோடி பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

15 ஜனவரி 2022, 8:18 AM
2.29 கோடி பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், ஜன 15- நாட்டில் நேற்று இரவு 11.59 மணி வரை 2 கோடியே 29 லட்சத்து 1 ஆயிரத்து 50 பெரியவர்கள் அல்லது 97.8 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 2 கோடியே 31 லட்சத்து 81 ஆயிரத்து 492 பேர் அல்லது 99 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இதனிடையே 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 90.9 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 60 ஆயிரத்து 918 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ள வேளையில் 88.1 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 73 ஆயிரத்து 020 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று நாடு முழுவதும் 236,104 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் 2,234 பேர் இரண்டாது டோஸ் தடுப்பூசியையும் 1,746 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 232,124 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 6 கோடியே 5 லட்சத்து 57 ஆயிரத்து 570  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்து 43 ஆயிரத்து 384 ஆகும்.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.