ECONOMY

அனிஸ் அமைப்புக்கு சின்னம் வரையும் போட்டி- வெ.1,000 பரிசு வெல்ல வாய்ப்பு

14 ஜனவரி 2022, 8:04 AM
அனிஸ் அமைப்புக்கு சின்னம் வரையும் போட்டி- வெ.1,000 பரிசு வெல்ல வாய்ப்பு

ஷா ஆலம்,ஜன 14;- அனிஸ் எனப்படும் சிலாங்கூர் பிரத்தியேக சிறார் நல அமைப்புக்கு பொருத்தமான சின்னத்தை வரையும் போட்டியை யாவாஸ் அறவாரியம் ஏற்பாடு செய்துள்ளது. 

நேற்று முன்தினம் தொடங்கி இம்மாதம் 28 ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் அனைத்து மலேசியர்களும் பங்கேற்கலாம். ஒரு போட்டியாளர் எத்தனை சின்னங்களை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

ஆயினும், ஒரு சின்னம் மற்றும் இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதனை வரைந்தவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இப்போட்டியில் கலந்து கொள்வோர் சின்னங்கள் உள்நாட்டு வெளிநாட்டு சின்னங்களை காப்பியடித்ததாகவோ சாயலைக் கொண்டதாகவோ இருக்கக்கூடாது என்று யாவாஸ் போஸ்புக் வழி வெளியிட்ட அறிக்கை கூறியது.

ஆர்வமுள்ளோர் https://docs.google/.../1CzlmvyZFAgsllnG-WkydzexYXWb...edit என்ற அகப்பக்கம் வாயிலாக தங்கள் தகவல்ளை பதிவு செய்யலாம் என்பதோடு தங்கள் படைப்புகளை anisselangor@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

 

இப்போட்டியின் முடிவுகள் வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அனிஸ் பேஸ்புக்கில் வெளியிடப்படும்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.