கோலாலம்பூர், ஜன 14- நாட்டில் நேற்று 3,684 கோவிட்-19 நோய்த் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 3,198 ஆக இருந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.நேற்றைய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 98 ஆயிரத்து 917 ஆக அதிகரித்துள்ளதாக அவர் சொன்னார்.
நேற்று 3,997 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.
இதன் வழி நோய்த் தொற்றிலிருந்துவிடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 26 ஆயிரத்து 891 ஆக உயர்வு கண்டுள்ளது.
நேற்றைய தொற்றுகளில் 34 அல்லது 0.9 விழுக்காடு மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் எஞ்சிய 3,650 தொற்றுகள் (99.1 விழுக்காடு) ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் கொண்டுள்ளதாக நோர் ஹிஷாம் கூறினார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 192 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் 91 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது என்று கோவிட்-19 நோய்த் தொற்றின் சமீபத்திய நிலவரங்கள் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
ECONOMY
நாட்டில் 3,684 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு
14 ஜனவரி 2022, 7:34 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
சிலாங்கூர் அரையாண்டு முதலீட்டு மதிப்பு RM70 பில்லியன்; சேவை, உற்பத்தித் துறைகள் முக்கிய பங்கு
Bernama
12 செப்டெம்பர் 2026

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



