ECONOMY

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எம்.பி.பி.ஜே. பணியாளர்களுக்கு மின்சார சாதனங்கள் விநியோகம்

10 ஜனவரி 2022, 7:27 AM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எம்.பி.பி.ஜே. பணியாளர்களுக்கு மின்சார சாதனங்கள் விநியோகம்

ஷா ஆலம், ஜன 10- மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற ஊழியர்களுக்கு மின்சாரப் பொருள்கள் வழங்கப்பட்டன.

குளிர் பதனப் பெட்டி, சலவை இயந்திரம், தொலைக்காட்சி, ரைஸ் குக்கர், சுடுநீர் கேத்தல், மின் விசிறி, எரிவாயு சமையல் அடுப்பு போன்ற பொருள்களை அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

இந்த பொருள்களை நிறுவன சமூக கடப்பாட்டின் அடிப்படையில் வர்த்தக ஸ்தாபனங்களும்    தனி நபர்களும் வழங்கியதாக மாநகர் மன்றம் தனது போஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்நோக்கும் பொருளாதார சுமையை குறைப்பதற்கு   இந்த  உதவி ஓரளவு துணை புரியும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அது கூறியது.

பூச்சோங்,  டிங்கில்,  உலு லங்காட்டில் வசிக்கும் பணியாளர்களுக்கு டத்தோ பண்டார் முகமது அஸான் முகமது அமீர் இந்த உபகரணங்களை ஒப்படைத்தார்.  இதனிடையே, ஷா ஆலம்,  தாமான் ஸ்ரீ மூடா மற்றும்  புக்கிட் லஞ்சோங்கில்  வசிக்கும் பணியாளர்கள் துணை டத்தோ பண்டார் ஷரிபா மர்ஹாய்னியி சைட் அலியிடமிருந்து உதவிப் பொருள்களைப் பெற்றுக் கொண்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.