ALAM SEKITAR & CUACA

அமலாக்க அதிகாரியிடம் சினமூட்டும் வகையில் நடந்து கொண்ட ஆடவர் கைது

6 ஜனவரி 2022, 7:53 AM
அமலாக்க அதிகாரியிடம் சினமூட்டும் வகையில் நடந்து கொண்ட ஆடவர் கைது

ஷா ஆலம், ஜன 6- கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக அமலாக்க அதிகாரியிடம் தகாத வார்த்தைகளைப் பிரயோகித்ததன் மூலம் சினமூட்டும் செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த சந்தேகப் பேர்வழியை தாங்கள் நேற்றிரவு 9.00 மணியளவில் சவுஜானா உத்தாமா ஜாலான் 6/3 இல் கைது செய்ததாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். ஷஹாத்தோன் அபு பாக்கார் கூறினார்.

கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக அமலாக்க அதிகாரி ஒருவர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஆடவரை நேற்றிரவு 9.00 மணியளவில் கைது செய்தோம் என்று இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இப்புகார் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 506 வது பிரிவின் கீழ் விசாரதணை நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று சட்டத்திற்கு புறம்பான முறையில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு குற்றப்பதிவுகளை வழங்கி வந்த கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக அமலாக்க அதிகாரியை ஆடவர் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வந்த து.

இதனைத் தொடர்ந்து அச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அமலாக்க அதிகாரி போலீசில் புகார் செய்தார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.