ECONOMY

வெள்ளம்- 5 துயர் துடைப்பு மையங்களில் 479 பேர் இன்னும் தங்கியுள்ளனர்

31 டிசம்பர் 2021, 8:53 AM
வெள்ளம்- 5 துயர் துடைப்பு மையங்களில் 479 பேர் இன்னும் தங்கியுள்ளனர்

ஷா ஆலம், டிச 31- இன்று காலை 8.00 மணி நிலவரப்படி சிலாங்கூர் மாநிலத்தில் ஐந்து தற்காலிக வெள்ள துயர் துடைப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இம்மாதம் 18 ஆம் தேதி  ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில் இந்த துயர் துடைப்பு மையங்கள் அமைந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த மையங்களில் 134 குடும்பங்களைச் சேர்ந்த 479 தங்கியுள்ளதாக தனது டிவிட்டர் பதிவில் அவர் தெரிவித்தார்.

கடந்த 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை வழக்கத்திற்கும் மாறாக இரண்டு மடங்கு அதிக மழை பெய்த காரணத்தால் மாநிலத்தில் பல பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.

இந்த வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியளிக்கவும் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பு செய்யவும் மாநில அரசு 10 கோடி வெள்ளி நிதியில் சிலாங்கூர் பங்கிட் எனும் எழுச்சித் திட்டத்தை அறிவித்தது.

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.