ALAM SEKITAR & CUACA

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வருமான வரி செலுத்துவதை ஒத்தி வைக்க அனுமதி

29 டிசம்பர் 2021, 11:58 AM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வருமான வரி செலுத்துவதை ஒத்தி வைக்க அனுமதி

கோலாலம்பூர், டிச 29- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் வருமான வரியை செலுத்துவதை ஒத்தி வைக்க உள்நாட்டு வருமான வரி வாரியம் கருணை அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது.

CP204 எனப்படும் மதிப்பீட்டு வருமான வரியை செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு டிசம்பர் மாதத்திலிருந்து ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருமான வரி வாரியம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது 

அதே சமயம், ஜனவரி மாதத்திற்கான விசாரணை, தணிக்கை, வசூலிப்பு, சிவில் வழக்கு தொடர்பான கட்டணங்களை பிப்ரவரி மாதம் வரை ஒத்தி வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும்,டிசம்பர் மாதத்திற்கான தொழிலாளர்களின் மாதாந்திர வரித் தொகை PCB அல்லது CP38 செலுத்துவது ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

வரி செலுத்துவதை ஒத்தி வைக்க விரும்பும் தொழிலாளர்களும் முதலாளிகளும்  மின்னஞ்சல் வாயிலாகவும் உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் அகப்பக்கம் மூலம் பதவிறக்கம் செய்யக்கூடிய பாரங்கள் மூலமாகவும் ஆதரவு ஆவணங்களுடன் மனு செய்யலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.