கோலாலம்பூர், டிச 25 - நாட்டில் நேற்று வரை மொத்தம் 2 கோடியே 28 லட்சத்து 34 ஆயிரத்து 352 பெரியவர்கள் அல்லது 97.5 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் .மேலும் 2 கோடியே 31 லட்சத்து 34 ஆயிரத்து 179 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 44 ஆயிரத்து 559 பேர் அல்லது 87.2 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாக முடித்துள்ள வேளையில் 28 லட்சத்து 39 ஆயிரத்து 606 பேர் அல்லது 90.2 விழுக்காட்டினருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
நேற்று மொத்தம் 140,443 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அவர்களில் 134,335 பேர் ஊக்கத் தடுப்பூசிகளையும் 3,901பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளையும் 2,207 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.
இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரத்து 268 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட ஊக்கத் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 53 லட்சத்து 63 ஆயிரத்து 641 ஆகும்.
ECONOMY
நாட்டில் 2.28 கோடி பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்
25 டிசம்பர் 2021, 10:09 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தீவிரம்
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




