ஷா ஆலம், டிச 24- தாமான ஸ்ரீ மூடாவில் மின் விநியோகம் தடைபட்டுள்ளதால் நீர் தடுப்பணை மதகின கதவுகளை திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால் அக்கதவுகளை தானியங்கி முறையில் அல்லாமல் சுயபலத்தைக் கொண்டு திறக்க வேண்டியுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
எனினும், அந்த கதவை வலுக்கட்டாயமாக திறக்க முயற்சிக்கும் போது அதன் இரும்புகள் வளையும் பட்சத்தில் அதனை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படலாம் என்றும் அவர் சொன்னார்.
மதகின் கதவுகளுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைக்கும் வகையில் நீரின் அளவை சமப்படுத்தும் விதமாக நீரை இறைத்து வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நான்கு நடமாடும் பம்ப் கருவிகளைக் கொண்டு விநாடிக்கு 960 லிட்டர் நீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஸ்ரீ மூடாவில் வெள்ளத்தை குறைக்க முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ALAM SEKITAR & CUACA
மின் தடையால் ஸ்ரீ மூடாவில் நீரை வெளியேற்றுவதில் சிக்கல்
24 டிசம்பர் 2021, 3:48 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
29 ஜூலை 2025

alam-sekitar & cuaca
'துருன் அன்வர்' போராட்டக்காரர்கள் கோலாலம்பூர் வீதிகளில் 20 டன் குப்பையை விட்டுச் சென்றார்கள்! ஙா கோர் மிங்
n.pakiya
28 ஜூலை 2025

national
7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
22 ஜூலை 2025

வகைeconomy
உங்கள் கருத்து என்ன?



