கோலாலம்பூர், டிச 17- நாட்டில் நேற்று 4,262 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. முன்தினம் இந்த எண்ணிக்கை எண்ணிக்கை 3,900 ஆக இருந்தது.இந்த புதிய தொற்றுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 7 ஆயிரத்து 402 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று பதிவான 4,262 கோவிட்-19 சம்பவங்களில் 4,226 உள்ளூரில் பரவிய வேளையில் எஞ்சிய 36 சம்பவங்கள் இறக்குமதியானவை என்று சுகாதாரத் துறைத் தலைமை இயக்குநர் டானஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நேற்றைய தொற்றுகளில் 78 அல்லது 1.8 விழுக்காடு மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பைக் கொண்டவையாகும். எஞ்சிய 4,184 சம்பவங்கள் அல்லது 98.2 விழுக்காடு லேசான நோய்த் தாக்கம் கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவையாகும் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
நேற்று 4,985 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து நோயிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 20 ஆயிரத்து 147 ஆக உயர்ந்துள்ளது.
383 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் அவர்களில் 198 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
நேற்று புதிதாக ஆறு நோய்த் தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டன
ECONOMY
நாட்டில் நேற்று 4,262 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு
17 டிசம்பர் 2021, 5:57 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தீவிரம்
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




