கோலாலம்பூர், டிச 14- நாட்டிலுள்ள பெரியவர்களில் 97.3 சதவீதம் பேர் அல்லது 2 கோடியே 27 லட்சத்து 88 ஆயிரத்து 835 பேர் கோவிட்-19 தடுப்பூசி ஊசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.
மேலும் 2 கோடியே 31 லட்சத்து 2 ஆயிரத்து 672 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
இதனிடையே, 12 முதல் 17 வயதிற்குட்பட்ட இளையோரில் 86.6 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 26 ஆயிரத்து 239 பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 28 லட்சத்து 26 ஆயிரத்து 872 பேர் அல்லது 89.8 சதவீதம் பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இது தவிர, நேற்று 129,387 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது அவர்களில் 4,027 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 4,907 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்ற வேளையில் 120,390 பேர் ஊக்கத் தடுப்பூசியை பெற்றனர்.
இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 50 லட்சத்து 39 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை செலுத்தப்பட்ட ஊக்கத்தடுப்பூசிகளின் எண்ணிக்கை 37 லட்சத்து 87 ஆயிரத்து 928 ஆகும்.
ECONOMY
2.27 கோடி பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்
14 டிசம்பர் 2021, 11:40 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

selangor
பொருளாதார நெருக்கடி: சிலாங்கூரில் 40 விழுக்காடு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
Shalini Rajamogun
24 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




