ECONOMY

சரவா மாநிலத் தேர்தல்- 20,000 போலீஸ், இராணுவ வீர ர்கள் இன்று வாக்களிக்கின்றனர்

14 டிசம்பர் 2021, 4:33 AM
சரவா மாநிலத் தேர்தல்- 20,000 போலீஸ், இராணுவ வீர ர்கள் இன்று வாக்களிக்கின்றனர்

கூச்சிங், டிச 14- சரவா மாநிலத்தின் 12 தேர்தலுக்கான தொடக்க வாக்களிப்பு இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் போலீஸ் மற்றும் இராணுவ வீரர்கள் வாக்களிக்கின்றனர்.

இந்த தொடக்க கட்ட வாக்களிப்பில் 12,585 இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களும் அவர்களின் துணைவியரும் 10,458 போலீஸ் அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் துணைவியரும் கலந்து கொள்கின்றனர்.

இந்த வாக்குப் பதிவு இன்று மாலை 5.00 மணி வரை நடைபெறும். இந்த தேர்தலில் மொத்தம் 349 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். வரும் சனிக்கிழமை வாக்களிப்பு நடைபெறும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.