MEDIA STATEMENT

சிலாங்கூர் ராஜா மூடா 31 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்- மந்திரி புசார் வாழ்த்து

12 டிசம்பர் 2021, 3:16 PM
சிலாங்கூர் ராஜா மூடா 31 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்- மந்திரி புசார் வாழ்த்து

ஷா ஆலம், டிச 12- மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமீர் ஷா தனது 31 வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். ராஜா மூடா அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ தாங்கள் பிரார்த்திப்பதாக சிலாங்கூர் அரச அலுவலகம் தனது முகநூல் பதிவில் கூறியது.

இன்று தனது 31வது பிறந்தாளை கொண்டாடும் மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா துஙகு அமீர் ஷா இப்னி சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சிலாங்கூர் ராஜா மூடா அவர்களின் 31வது பிறந்த நாளையொட்டி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மேன்மை தங்கிய ராஜா மூடா அவர்கள் பூரண நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனை பிரார்திக்கிறேன் என்று அவர் முகநூல்                 வாயிலாக வழங்கிய அந்த வாழ்த்துச் செய்தியில் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.