ECONOMY

86.4 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

4 டிசம்பர் 2021, 4:35 AM
86.4 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், டிச 4- நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 86.4 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 19 ஆயிரத்து 106 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்.

மேலும், 89.9 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 28 ஆயிரத்து 401 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

பெரியவர்களில் 97 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 27 லட்சத்து 14 ஆயிரத்து 044 பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் மேலும் 2 கோடியே 30 லட்சத்து 44 ஆயிரத்து 061 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, நாட்டில் நேற்று 125,927 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் 4,417 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 6,721 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 114,789 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 59 லட்சத்து 60 ஆயிரத்து 016 ஆக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.