ECONOMY

2  கோடியே 27 லட்சம் பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

30 நவம்பர் 2021, 8:07 AM
2  கோடியே 27 லட்சம் பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், நவ 30- நாட்டில் நேற்று இரவு 11.59 மணி வரை 2 கோடியே 26 லட்சத்து 65 ஆயிரத்து 493 பெரியவர்கள் அல்லது 96.8 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 2 கோடியே 30 லட்சத்து 10 ஆயிரத்து 447 பேர் அல்லது 98.3 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான 27 லட்சத்து 5 ஆயிரத்து 253 இளையோர் அல்லது 85.9 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 28 லட்சத்து 19 ஆயிரத்து 774 பேர் அல்லது 89.5 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று நாட்டில் 109,139 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 6,711 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 4,538 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் பெற்ற வேளையில் 97,890 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 33 லட்சத்து 45 ஆயிரத்து 233 ஆகி அதிகரித்துள்ளது.

அதே சமயம், ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 32 ஆயிரத்து 750 ஆக உயர்வு கண்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.