ECONOMY

நாட்டில் 27 லட்சம் இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

29 நவம்பர் 2021, 9:25 AM
நாட்டில் 27 லட்சம் இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

ஷா ஆலம், நவ 29- நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 85.9 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 2 ஆயிரத்து 748 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 89.6 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 18 ஆயிரத்து 165 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இது தவிர பெரியவர்களில் 96.8 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 26 லட்சத்து 59 ஆயிரத்து 382 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 98.3 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 30 லட்சத்து 6 ஆயிரத்து 300 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்.

நேற்று நாட்டில் 42,010 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2,030 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 3,214 பேர் இரண்டாது டோஸ் தடுப்பூசியையும் பெற்ற வேளையில் 36,766 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 32 லட்சத்து 31 ஆயிரத்து 117 ஆக அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.