ECONOMY

அம்பாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மந்திரி புசார் ஆய்வு

28 நவம்பர் 2021, 6:08 AM
அம்பாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மந்திரி புசார் ஆய்வு

ஷா ஆலம், நவ 27- கடும் மழை காரணமாக அம்பாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று பார்வையிட்டார்.

கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மந்திரி புசார் வருகை புரிந்ததாக அந்நிறுவனம் தெரிவித்தது.

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவுப் பணிகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

வெள்ளத்தினால் குவிந்த குப்பைகள் மற்றும் பழுதடைந்த மரத்தளவாடப் பொருள்களை அப்புறப்படுத்தும் பணியில் தங்கள் நிறுவனம் சார்பாக எழுபது பணியாளர்கள்  ஈடுபட்டு வருவதாகவும் அது தெரிவித்து.

கடந்த வாரம் அம்பாங், உலு லங்காட், கோம்பாக் ஆகிய மாவட்டங்களில் பெய்த அடை மழையில் அம்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.