ECONOMY

வெ. 880,000 நிதி ஒதுக்கீட்டில் பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு இயக்கம்

26 நவம்பர் 2021, 11:08 AM
வெ. 880,000 நிதி ஒதுக்கீட்டில் பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு இயக்கம்

ஷா ஆலம், நவ 26- பிளாஸ்டிக், பொலிஸ்ட்ரின், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணைய் பயன்பாட்டிற்கு எதிரான பிரசார நடவடிக்கைக்காக சிலாங்கூர் மாநில அரசு 880,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சுற்றுச்சூழல் தொடர்பான இயக்கம் மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பிளாஸ்டிக், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், பொலிஸ்ட்ரின் உள்ளிட்ட பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிலாங்கூர் எப்போதும் முன்னோடி மாநிலமாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பிரசார நடவடிக்கையை தீவிரப்படுத்துவதற்காக 880,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளோம் என்றார் அவர்.

இதனிடையே, மறுசுழற்சி மையங்களை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க மாநிலஅரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.