ECONOMY

சிறு தொழில்முனைவோர் மானிய திட்டத்திற்கு வெ. 20 லட்சம் ஒதுக்கீடு

26 நவம்பர் 2021, 10:28 AM
சிறு தொழில்முனைவோர் மானிய திட்டத்திற்கு வெ. 20 லட்சம் ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ 26- மாநிலத்திலுள்ள சிறு தொழில்முனைவோர் வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக சிலாங்கூர் அரசு சிலாங்கூர் சிறு தொழில்முனைவோர் நிதியை தொடக்கியுள்ளது.

இத்திட்டத்தின் வெற்றிக்காக மாநில 20 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஒன்பது மாவட்டங்கள் வாயிலாக இந்த நிதி தொழில்முனைவோருக்கு வழங்கப்படும். இதன் மூலம் போட்டியிடும் ஆற்றல் கொண்ட தொழில்முனைவோரை உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளை கொண்டிருக்க வேண்டும். தகுதியுள்ள தொழில்முனைவோருக்கு 30,000 வெள்ளி வரை மானியம் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

 

வகைpbt

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.