ECONOMY

குழாய் உடைப்பு காரணமாக சுங்கை தெக்காலியில் மண் சரிவு

25 நவம்பர் 2021, 8:07 AM
குழாய் உடைப்பு காரணமாக சுங்கை தெக்காலியில் மண் சரிவு

ஷா ஆலம், நவ 25- உலு லங்காட், ஜாலான் கம்போங் சுங்கை தெக்காலியில் மண் சரிவு ஏற்பட்டதற்கு நிலத்திடியில் குழாய் உடைந்ததே காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் காலை 7.37 மணியளவில் தாங்கள் பொதுமக்களிடமிருந்து புகாரைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமீஸ் கூறினார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குழாய் உடைப்பு காரணமாக பூமிக்கு அடியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மலைச்சாரலை சரி செய்யும் பணிகள் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக குழாய் உடைப்பு தொடர்பான தகவல் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மற்றும் பொதுப்பணித் துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

அப்பகுதியில் பயணம் மேற்கொள்வோர் மிகுந்த கவனப்போக்கை கடைபிடிக்கும்படி நோராஸாம் கேட்டுக் கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.