ECONOMY

படகுத் துறையை பழுதுபார்க்க வெ.20,000 நிதி- தஞ்சோங் சிப்பாட் உறுப்பினர் வழங்கினார்.

24 நவம்பர் 2021, 10:09 AM
படகுத் துறையை பழுதுபார்க்க வெ.20,000 நிதி- தஞ்சோங் சிப்பாட் உறுப்பினர் வழங்கினார்.

ஷா  ஆலம், நவ 24- கம்போங் பத்து லாவுட் பகுதியிலுள்ள படகுத் துறையில் பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அங்குள்ள மீனவர் சங்கத்திற்கு 20,000 வெள்ளித் தொகையை தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

அந்த படகுத் துறையின் கூரைகளை மாற்றுவது மற்றும் அங்குள்ள சூராவ் தொழுகை மையத்தை பழுதுபார்ப்பது போன்ற பணிகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா கூறினார்.

இவ்வாண்டு தொடங்கி பல கட்டங்களாக இந்த நிதி வழங்கப்பட்டது. ஆக சமீபத்தில் புயல் காற்றினால் சேதமடைந்த பகுதிகள் மற்றும் ஒழுகும் கூரைகளை சரிசெய்வதற்காக 2,500 வெள்ளி வழங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

மீனவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மானியம் வழங்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மானியத்தை மீனவர்கள் முறையான வழியில் பயன்படுத்துவார்கள் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் இந்த படகுத் துறைக்கு மேலும் அதிகமான வருகையாளர்களை ஈர்க்க முடியும் எனத் தாம் நம்புவதாகவும்  அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.