ECONOMY

நாட்டில்  26 லட்சம் இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

24 நவம்பர் 2021, 6:52 AM
நாட்டில்  26 லட்சம் இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், நவ 24- நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 82.7 விழுக்காட்டினர் அல்லது 26 லட்சத்து 3 ஆயிரத்து 148 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும், 87.7 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 60 ஆயிரத்து 656 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர். நேற்று இரவு 11.59 மணி வரை இந்த எண்ணிக்கை பதிவானதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இதனிடையே, பெரியவர்களில் 95.8 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 24 லட்சத்து 25 ஆயிரத்து 264 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 98 விழுக்காட்டினருக்கு அதாவது 2 கோடியே 29 லட்சத்து 36 ஆயிரத்து 203 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நேற்று 135,631 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 10,473 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 5,233 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்ற வேளையில் 119,925 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் வழி, பிக் எனப்படும் தேசிய கோவிட்.19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ்  செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 22 லட்சத்து 32 ஆயிரத்து 576 ஆக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.