ECONOMY

நாட்டில் நேற்று வரை 25.9 லட்சம் இளையோர் தடுப்பூசி பெற்றனர்

23 நவம்பர் 2021, 7:12 AM
நாட்டில் நேற்று வரை 25.9 லட்சம் இளையோர் தடுப்பூசி பெற்றனர்

கோலாலம்பூர், நவ 23- நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 82.5 விழுக்காட்டினர் அல்லது 25 லட்சத்து 97 ஆயிரத்து 622 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 87.6 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 58 ஆயிரத்து 317 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இது தவிர, பெரியவர்களில் 95.7 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 570 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 97.9 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 29 லட்சத்து 30 ஆயிரத்து 251 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று நாடு முழுவதும் 109,016 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 11,912 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 4,941 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் பெற்ற வேளையில் 92,163 பேருக்கு ஊக்கத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டதின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 20 லட்சத்து 82 ஆயிரத்து 943 ஆக உயர்ந்துள்ளது.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.