ALAM SEKITAR & CUACA

எச்சரிக்கை - பிற்பகலில் சிலாங்கூரில் ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கனமழை.

21 நவம்பர் 2021, 9:26 AM
எச்சரிக்கை - பிற்பகலில் சிலாங்கூரில் ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கனமழை.

ஷா ஆலம், நவ 21 : சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலு லங்காட், சிப்பாங், கோலா லங்காட், கோம்பாக் மற்றும் உலு சிலாங்கூர் ஆகிய இடங்களில் மாலை 5 மணி வரை மோசமான வானிலை நிலவும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், பெர்லிஸ், கெடா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் மற்றும் சபா ஆகிய இடங்களிலும் இதே வானிலை நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் மூலம் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

பினாங்கு, பேராக், கிளந்தான், பகாங், கோலாலம்பூர், புத்ராஜெயா, சரவாக் ஆகிய மாநிலங்களில் மோசமான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.