ECONOMY

மலாக்காவில் - ஹராப்பான் ஐந்து இடங்களை வென்றது, பிஎன் 21இடங்களை பெற்றது

21 நவம்பர் 2021, 6:10 AM
மலாக்காவில் - ஹராப்பான் ஐந்து இடங்களை வென்றது, பிஎன் 21இடங்களை பெற்றது

ஷா ஆலம், 21 நவ: பக்காத்தான் ஹராப்பான்  மலாக்காவின் 28 மாநில சட்டமன்ற தொகுதிகளில் ஐந்தில் வெற்றி பெற்றது.  ஆயர் குரோ, புக்கிட் கட்டில், கேசிடாங், கோத்தா லக்க்ஷமானா மற்றும் பந்தாய் ஹிலீர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

முன்னாள் ஹராப்பான் மலாக்கா முதல்வர் அட்லி ஜஹாரி புக்கிட் கட்டிலில் 6,805 வாக்குகள் பெற்று பாரிசான் நேசனல் (பிஎன்) மற்றும் பெரிக்காத்தான்  நேஷனல் (பிஎன்) வேட்பாளர்களை தோற்கடித்தார்.

பிஎன் 21 இடங்களை வென்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று மாநில அரசாங்கத்தை அமைத்தது. சுங்கை ஊடாங் மற்றும் பெம்பான் ஆகிய இரண்டு இடங்களில் PN  வெற்றி பெற்றது.

கடந்த சட்டமன்றத்தில் முதல்வர் டத்தோ சுலைமான் எம்.டி அலிக்கு நான்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆதரவை வாபஸ் பெற்றதை அடுத்து, அக்டோபர் 4 அன்று மாநில சட்டமன்றம் கலைக்கப் பட்டதைத் தொடர்ந்து மலாக்கா மாநில சட்டமன்றதிற்கான தேர்தல் நடைபெற்றது.

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.