ECONOMY

மலாக்கா வாக்காளர்கள் 15வது பொதுத் தேர்தலுக்கு  வழி அமைப்பார்களா?

20 நவம்பர் 2021, 10:04 AM
மலாக்கா வாக்காளர்கள் 15வது பொதுத் தேர்தலுக்கு  வழி அமைப்பார்களா?

மலாக்கா வாக்காளர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் 15வது பொதுத் தேர்தலுக்கு   விரைவில் நாடாளுமன்றத்தை கலைக்க வழி அமைப்பார்களா? மலாக்கா மக்கள் யாரை தேர்ந்தெடுப்பார்கள்?

பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் வரிசையில் மலாக்கா இடம் பிடிக்குமா? மாநிலத்தின் வளம் மக்களுக்கோ என்ற பக்காத்தான் ஹராப்பான் கோஷம், மலாக்காவின் 476,037 வாக்காளர்கள் மத்தியில் எடுபடுமா என்பதை 28 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் இன்னும் சற்று நேரத்தில் தெரியப்படுத்துவர்.

கடந்த பொதுத் தேர்தல் போலன்றி, இம்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட் 19 நோய் தொற்று காலமாக இருப்பதால், தேர்தல் பிரச்சாரங்கள், மக்கள் சந்திப்புகளும் மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் நடைபெற்றது. வெற்றி பெற்ற பல சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறிகளாக இருப்பதால், சினமடைந்த வாக்காளர்கள் குறைவான எண்ணிக்கையில் வாக்களிக்க வருவதும் ஒரு காரணமாக  உள்ளது.

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.