கோலாலம்பூர், நவ 19- நாட்டில் நேற்று பதிவான 6,380 புதிய கோவிட்-19 சம்பவங்களில் 97.6 விழுக்காடு அல்லது 6,282 சம்பவங்கள் குறைந்த நோய்த் தாக்கம் கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.எஞ்சிய 1.5 சதவீதம் அல்லது 98 சம்பவங்கள் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் வகையைச் சேர்ந்தவை என அவர் கூறினார்.
நோய்த் தொற்று கண்டவர்களில் 541 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் மேலும் 263 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
நேற்று பதிவான 5,760 கோவிட்-19 நோய்த்தொற்று சம்பவங்களுடன் சேர்த்து நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 72 ஆயிரத்து 452 ஆக உயர்ந்துள்ளது என்றார் அவர்.
இந்நோய்த் தொற்றிலிருந்து நேற்று 4,551 பேர் குணமடைந்தனர். இதன் வழி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 55 ஆயிரத்து 283 ஆக உயர்ந்துள்ளது.
இது தவிர, 88 டெல்டா வகை நோய்த் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கோவிட்-19 நோய்த்தொற்றின் தற்போதைய நிலவரம் மற்றும் பரவல் தொடர்பான விரிவான தகவல்கள் https://covidnow.moh.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
ECONOMY
கோவிட்-19 சம்பவங்களில் 98.5 விழுக்காடு குறைவான நோய்த் தாக்கம் கொண்டவை
19 நவம்பர் 2021, 1:56 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தீவிரம்
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




