ECONOMY

சிப்ஸ் அனைத்துலக வர்த்தக மாநாட்டில் மீடியா சிலாங்கூர் பங்கேற்பு

19 நவம்பர் 2021, 1:53 AM
சிப்ஸ் அனைத்துலக வர்த்தக மாநாட்டில் மீடியா சிலாங்கூர் பங்கேற்பு

ஷா ஆலம், நவ 19- “சிப்ஸ்“ எனப்படும் 2021 அனைத்துலக சிலாங்கூர் வர்த்தக உச்சநிலை மாநாட்டில் மீடியா சிலாங்கூர் சென்.பெர்ஹாட் நிறுவனம் முதன் முறையாகப் பங்கேற்றுள்ளது.

மீடியா சிலாங்கூர் நிறுவனம் இந்த மாநாட்டில் முதன் முறையாக பங்கேற்ற போதிலும் இதன் காட்சிக் கூடம் வருகையாளர்களைப் பெரிதும்  கவர்ந்துள்ளதோடு அதிகமானோர் தொடர்ந்து இங்கு வந்தவண்ணம் உள்ளதாக அந்நிறுவனத்தின் சந்தை மற்றும் விளம்பரப் பிரிவு அதிகாரி ஷியாஹிர் காட்ரி கூறினார்.

நாங்கள் மாநில அரசின் செய்தி நிறுவனம் என்றத் தகவலை சமுதாயத்திற்கு உணர்த்துவது மற்றும் இந்த ஊடகத்தை பிரபலப்படுத்துவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த கண்காட்சியில் தாங்கள் பங்கேற்றதாக அவர் சொன்னார்.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தின் முதலாவது மண்டபத்தில் 1054 என்ற எண்ணில் உள்ள தங்களின் காட்சிக் கூடத்திற்கு வருகை தரும்படி  பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

மீடியா சிலாங்கூர் குறித்து மேல் விபரங்களைப் பெற விரும்புவோர் 03-5523 4856 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தங்கள் பொருள்கள் அல்லது சேவையை விளம்பரப்படுத்த விரும்புவோர்  என்ற marketing@mediaselangor.com  முகவரியில் சந்தைப்பிரிவுக்கும் sales@mediaselangor.com  என்ற முகவரியில் விளம்பரப் பிரிவுக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.