ECONOMY

தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை 95.5 விழுக்காடாக அதிகரிப்பு

18 நவம்பர் 2021, 3:55 AM
தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை 95.5 விழுக்காடாக அதிகரிப்பு

கோலாலம்பூர், நவ 18- நாட்டில் நேற்று வரை 2 கோடியே 23 லட்சத்து 50 ஆயிரத்து 755 பெரியவர்கள் அல்லது 95.5 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும், 2 கோடியே 28 லட்சத்து 91 ஆயிரத்து 163 பேர் அல்லது 97.8 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம்  கூறியது.

இது தவிர 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 81.4 விழுக்காட்டினர் அல்லது 25 லட்சத்து 63 ஆயிரத்து 344 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ள வேளையில் 87.2 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 45 ஆயிரத்து 533 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று நாடு முழுவதும் 117,736 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 20,013 பேர்  இரண்டாவது தடுப்பூசியையும் 6,243 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 91,480 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 15 லட்சத்து 91 ஆயிரத்து 383 ஆக உயர்வு கண்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.