ECONOMY

சிலாங்கூர் புத்தக விழாவுக்கு மெருகூட்டுவோம்- மந்திரி புசார் அழைப்பு

17 நவம்பர் 2021, 11:04 AM
சிலாங்கூர் புத்தக விழாவுக்கு மெருகூட்டுவோம்- மந்திரி புசார் அழைப்பு

ஷா ஆலம், நவ 17- ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை நடைபெறும்  புத்தக விழாவை மெருகூட்ட வரும்படி பொதுமக்களுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த புத்தக விழாவுக்கு வரும்போது எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

எஸ்.ஒ.பி. விதிகளை கடைபிடிப்பதன் மூலம்  இந்த அறிவு விழாவை கலகலப்பானதாக ஆக்குவோம் என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

நாட்டின் முதன்மை கல்வி மற்றும் அறிவு மையம் என்ற சிலாங்கூரின் நிலைக்கேற்ப இந்த புத்தக விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் நாட்டின் பொருளாதார கிடங்காக மட்டுமின்றி கல்வி மற்றும் அறிவாற்றல் கிடங்காகவும் திகழ்கிறது எனவும் அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் பொது நூலக கழக ஏற்பாட்டில் நடைபெறும் இந்த புத்தக விழா தினசரி காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10.00 மணி வரை அது செயல்படும்.

 

வகைpendidikan

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.