ஷா ஆலம், நவ 17 - குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு சேதமடைந்த நீர்க் குழாய்களை சரிசெய்யும் சேவையை ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தொடக்கியுள்ளது.இந்த சேவையைப் பெற விரும்புவோர் https://www.airselangor.com/media/sesama-mara என்ற அகப்பக்கம் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று முகநூல் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் நிறுவனம் தெரிவித்துள்ளது .
நிறுவன சமூக கடப்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவிலுள்ள வசதி குறைந்தவர்கள் இல்லங்களில் இத்திட்டத்தை நாங்கள் அமல்படுத்துகிறோம் என்று அது கூறியது.
வீடுகளில் மீட்டருக்கு உட்புறத்தில் உள்ள குழாய்களில் ஏற்படும் கசிவு காரணமாக அதிகமான நீர்க்கட்டணத்தை செலுத்த வேண்டிய கட்டாயம் குடியிருப்பாளர்களுக்கு ஏற்படுவதாக அந்த அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.
இதற்கு முன்னர், செத்தியா ஆலமில் உள்ள சாய் பாண்டியன் ஆதரவற்றோர் நல இல்லத்தில் பழுதடைந்த குழாய்களை சரிசெய்யும் பணியை ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மேற்கொண்டது.
நீண்ட நாட்களாக வீட்டில் கசிவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் வழங்கிய இந்த உதவி தமக்கு பேருதவியாக அமைந்துள்ளதாக சாய் பாண்டியன் இல்லத்தின் நிறுவனர் கூறினார்.
ECONOMY
பி40 தரப்பினருக்கு குழாய் பழுதுபார்ப்பு சேவை- ஆயர் சிலாங்கூர் வழங்குகிறது
17 நவம்பர் 2021, 7:35 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தீவிரம்
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




