ECONOMY

2.23 கோடி பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

16 நவம்பர் 2021, 8:09 AM
2.23 கோடி பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், நவ 16- நாட்டில் நேற்று வரை 95.3 விழுக்காட்டு பெரியவர்கள் அல்லது 2 கோடியே 23 லட்சத்து 18 ஆயிரத்து 132 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 97.7 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 28 லட்சத்து 75 ஆயிரத்து 185 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இதனிடையே, 12 முதல்  17 வயது வரையிலான இளையோரில் 80.4 விழுக்காட்டினர் அல்லது 25 லட்சத்து 31 ஆயிரத்து 793 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் மேலும் 87 விழுக்காட்டினருக்கு அல்லது 27 லட்சத்து 40 ஆயிரத்து 442 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று நாட்டில் 102,274 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி  பெற்றவர்களில் 26,295 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் 5,488 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 70,274 பேர் ஊக்கத் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 13 லட்சத்து 22 ஆயிரத்து 636 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று வரை ஊக்கத் தடுப்பூசிப் பெற்றவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 42 ஆயிரத்து 234 ஆகும்

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.