ECONOMY

மலேசிய கிண்ணம்- சிலாங்கூர் அணிக்கு ஆதரவளிக்க அரங்கில் திரள்வீர்!

14 நவம்பர் 2021, 3:22 AM
மலேசிய கிண்ணம்- சிலாங்கூர் அணிக்கு ஆதரவளிக்க அரங்கில் திரள்வீர்!

ஷா ஆலம், நவ 14- மலேசிய கிண்ணப் போட்டியின் காலுறுதி ஆட்டத்தில் சிலாங்கூர் எப்.சி. அணியும்  கே.எல். சிட்டி எப்.சி. அணியும் இன்று மோதுகின்றன.

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற அரங்கில் நடைபெறும் இந்த போட்டியில் சிலாங்கூர் அணிக்கு ஆதரவளிக்க அரங்கிற்கு திரண்டு வருமாறு ரசிகர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த போட்டியை காண அரங்கிற்கு நேரில் வருமாறு சிலாங்கூர் கால்பந்து ரசிகர்களை அக்குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் அலெக்சாண்டர் அக்யார்க்வா அமேயாவ் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆட்டத்தைக் காண ரசிகர்ள் நேரடியாக அரங்கிற்கு வர வேண்டும் என நான் விரும்புகிறேன். இதற்கான டிக்கெட்டுகளை https://bit.ly/BuyTicketSELKLC அல்லது SelangorFC.com  என்ற அகப்பக்கம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்  என்று அவர் சொன்னார்.

கடந்த வாரம் லார்கின் அரங்கில் நடந்த ஆட்டத்தில் கூச்சிங் சிட்டி எப்.சி. அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சிலாங்கூர் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.