கோலாலம்பூர், நவ 11 - நாட்டில் நேற்று வரை மொத்தம் 2 கோடியே 22 லட்சத்து 48 ஆயிரத்து 737 பேர் அல்லது பெரியவர்களில் 95 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.மேலும் 97.5 விழுக்காடு அல்லது 2 கோடியே 28 லட்சத்து 38 ஆயிரத்து 338 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அகப்பக்கமான கோவிட்நாவ் கூறியது.
நேற்று மொத்தம் 131,240 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதில் 37,689 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாக பெற்ற வேளையில் எஞ்சிய 7,650 பேருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது தவிர, மேலும் 85,901 பேருக்கு ஊக்கத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இதன் வழி கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) கீழ் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 8 லட்சத்து 4 ஆயிரத்து 374 ஆக அதிகரித்துள்ளது.
12 முதல் 17 வயதுடைய இளையோரில் 24 லட்சத்து 42 ஆயிரத்து 373 பேர் அல்லது 77.6 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 86.6 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 25 ஆயிரத்து 876 பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 731,635 ஊக்கத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
ECONOMY
நாட்டில் 2 கோடியே 22 லட்சம் பெரியவர்கள் தடுப்பூசி பெற்றனர்
11 நவம்பர் 2021, 5:11 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
பொருளாதார வளர்ச்சிக்கு எரிபொருள் மற்றும் அடிப்படைப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு தீவிரம்
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




