ECONOMY

32 அம்ச தேர்தல் அறிக்கை- மலாக்கா ஹராப்பான் கூட்டணி வெளியிட்டது

11 நவம்பர் 2021, 2:30 AM
32 அம்ச தேர்தல் அறிக்கை- மலாக்கா ஹராப்பான் கூட்டணி வெளியிட்டது

ஷா ஆலம், நவ 11- மலாக்கா மாநில தேர்தலையொட்டி 32 அம்ச தேர்தல் அறிக்கையை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வெளியிட்டது.

ஹராப்பானுடன் இணைந்து முன்னேறுவோம் செயல் திட்டம் எனும் தலைப்பிலான அந்த தேர்தல் அறிக்கையை மலாக்கா மாநில ஹராப்பான் தலைவர் அட்லி ஸஹாரி வெளியிட்டார்.

சுகாதாரம், பொருளாதாரம், தொழில்முனைவோர் மற்றும் மலாக்கா அரசில் நிர்வாக சீர்திருத்தம் ஆகிய அம்சங்களை அந்த தேர்தல் அறிக்கை உள்ளடக்கியுள்ளது.

மலாக்கா நல்வாழ்வு, மலாக்கா சுபிட்சம், மலக்கா நிலைத்தன்மை ஆகிய அடிப்படைக் கூறுகளை உள்ளடக்கிய இந்த தேர்தல் அறிக்கை நீடித்த பொருளதார வளர்ச்சி, மக்களின் நல்வாழ்வு மற்றும் அரசியல் நிலைத்தன்மைக்கு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆறு வியூகங்களைக் கொண்டுள்ளது..

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.