ECONOMY

தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 95 விழுக்காட்டை நெருங்குகிறது

9 நவம்பர் 2021, 3:55 AM
தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 95 விழுக்காட்டை நெருங்குகிறது

கோலாலம்பூர், நவ 9- நாட்டிலுள்ள பெரியவர்களில் 94.9 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 22 லட்சத்து 14 ஆயிரத்து 24 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 97.5 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 28 லட்சத்து 19 ஆயிரத்து 122 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ அகப்பக்கமான கோவிட்நாவ் கூறியது.

அதே சமயம், நேற்று நாடு முழுவதும் 108,821 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 44,342 பேர் இரண்டாது டோஸ் தடுப்பூசியைப் பெற்ற வேளையில் 6,342 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் 58,395 பேருக்கு ஊக்கத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

இதன் வழி பிக் எனப்படும் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 5 லட்சத்து 27 ஆயிரத்து 937 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று வரை 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 76 விழுக்காட்டினர் அல்லது 23 லட்சத்து 90 ஆயிரத்து 929 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 86.4 விழுக்காட்டினர்  அல்லது 27 லட்சத்து 19 ஆயிரத்து 497 பேர் குறைந்த பட்சம்  ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.