ECONOMY

மலாக்கா தேர்தல்- ஹராப்பான் செயல் திட்டத்தை அன்வார் புதன் கிழமை வெளியிடுவார்

8 நவம்பர் 2021, 11:19 AM
மலாக்கா தேர்தல்- ஹராப்பான் செயல் திட்டத்தை அன்வார் புதன் கிழமை வெளியிடுவார்

மலாக்கா, நவ 8- மலாக்கா மாநில தேர்தலையொட்டி ஹராப்பானுடன் முன்னேறுவோம் செயல் திட்டத்தை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வரும் புதன்கிழமையன்று வெளியிடும்.

பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதர கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் முன்னிலையில் இந்த செயல் திட்டத்தை வெளியிடுவார் என்று மலாக்கா மாநில ஹராப்பான் கூட்டணியின் தலைவர் அட்லி ஜஹார் கூறினார்.

இந்த செயல் திட்டம் புதன் கிழமை மாலை 5.00 மணிக்கு வெளியிடப்படும் எனக்கூறிய அவர், எஸ்.ஒ.பி. நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு இதன் தொடர்பான இதர விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றார்.

மாநிலத்தில் போட்டியிடவுள்ள 28 தொகுதிகளை இலக்காக கொண்டு பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி தனது பிரசார நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று அவர் சொன்னார்.

இந்த தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் 50 வயதுக்குட்பட்ட 18 வேட்பாளர்களும் 50 வயதுக்குட்பட்ட 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அவர்களில் வயது குறைந்த வேட்பாளராக 21 வயதுடையவர் கருதப்படுகிறார் என்றார் அவர்.

ஹராப்பான் கூட்டணியின் முந்தைய சாதனைகளைக் கருத்தில் கொண்டு மக்கள் அக்கூட்டணிக்கு இம்முறையும் வாக்களிப்பார்கள் எனத் தாங்கள் நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.